Blog



இயக்குனர் ராகுல் சங்கிரித்யனின் படைப்பே ஷியாம் சின்ஹ ராய் திரைப்படம். தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட படம் தமிழ் மொழியிலும் பிரதி உருவாக்கப்படது.   இப்ப படத்தில் வரும் பாடலே "ஜெகதீஷ்வர தேவி...." எனும் பாடல்.   கடவுளின் மனைவிகளாக ஒரு காலத்தில் போற்றப்பட்ட தேவதாசிகள் பின்னைய நாட்களில் இழிவாக விமர்சிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு.   அந்த வகையில் இத் திரைப்படத்தில் சாய்ப்பல்லவி ஓர் தேவதாசி பாத்திரமேற்று கச்சிதமாக நடித்துள்ளார்.   ஜெகதீஷ்வர தேவி எனும் பாடல் தேவி துர்க்கையின் அருமைகளை எடுத்துக் கூறும் ஒரு பாடலாக உள்ளது. இப்படத்தில் உடனேயே ஞாபகத்திற்கு வர கூடிய பாடலாக மனதில் இடம்பிடித்திருக்குமளவிற்கு இசையமைப்பு பிரமாதம். தாளங்களின் கோர்வையும் , மிருதங்க ஒலியும் எம்மை அறியாமலேயே விரலில் தாளம் போட வைக்கின்றன.   பாடகர் அனுராக்குல்கரணியின் குரல் கணீர் என ஒலிக்கும். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு காந்த குரல்.   இப்பாடல் எவ்வாறு மனதில் ஒட்டி கொள்கிறதோ அதே போலவே இப்பாடலின் காட்சியமைப்பும் மனதில் இடம்பிடிக்கும்.   தேவதாசிகள் ஆடற்கலையில் தலை சிறந்தவர்கள். முன்னைய காலங்களில் கோயிலினுள்ளே இறைவனின் மனைவியாக இறைவனுக்கு பணிவிடை செய்து இறைவனை மரியாதை செலுத்தும் விதமாக பல்வேறு ஆடல் கலைகளை கற்று இறைவனின் திருவுருவ சிலையின் முன் நின்று ஆடுவார்கள். கோயிலனை விட்டு வெளியே வர தேவதாசிகளிற்கு அனுமதி இல்லை முன்னைய காலத்தில்.   காலம் செல்ல செல்ல பண்டிகை நாட்களில் மட்டும் மக்கள் முன் தோன்றி இறைவனின் புகழ் சொல்லும் பாடல்களிற்கு நடனம் ஆடிவிட்டு மீண்டும் கோவிலினுள் சென்றுவிடுவார்கள். அவர்கள் மக்கள் முன் தோன்றும் நாட்களில் அவர்களை இறைவனுக்கு சமனாக மதித்து ஆசிகளை கூட மக்கள் பெறுவார்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன.   பின்னைய காலங்களில் அந்நியர்கள் நாட்டை கைப்பற்றி இந்து கோவில்களை இடித்து அழித்ததிலிருந்தி வாழ்வாதார வழிக்காக அவர்களின் பண்பாடு மாறிபோய்விடது.   அது போலவே இப்பாடலில் துர்க்கையின் பண்டிகை காலத்தில் மட்டும் வெளியே வந்து துர்க்கையின் புகழ் பாடும் பாடலிற்கு நடனமாடுவர்கள்.   தேவதாசி வாழ்வின் கஷ்டங்களிற்கு இறைவன் மட்டுமே ஆறுதல் என்பதனை   "தீயோடு வேகின்ற வேரிற்கு நீராக வா...." எனும் வரிகள் மூலம் எடுத்துரைக்கின்றன.   அதே போன்று    "ஆறாத காயங்கள் சாய்கின்ற தோழாக வா , கரை சேர்க்க வா......" எனும் வரிகள் இறைவனின் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் தன்மையை விபரிக்கிறது.   அறியாத வயதிலே தேவதாசியாக பெண் பிள்ளைகளை கோவில்களிற்கு நேர்ந்து விடுவார்கள்.

NEWS

හඬ මත පැටළුණු අකුරු | 74 வது நீட்டிப்பு

  • Date: 2022-03-21